உலகம்
வைத்தியசாலைகள் போராளிகளின் மறைவிடங்களா..! இஸ்ரேலின் கணிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் ஹமாஸ் அமைப்பு
வைத்தியசாலைகள் போராளிகளின் மறைவிடங்களா..! இஸ்ரேலின் கணிப்புக்கு மறுப்பு தெரிவிக்கும் ஹமாஸ் அமைப்பு
காசா வைத்தியசாலைகள் ஹமாஸ் அமைப்பின் மறைவிடங்களாக பயன்படுத்துவதால் அவற்றின் அருகே தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் கூறி வருகிறது. ஆனால், வைத்தியசாலைகள் அவ்வாறு பயன்படுத்தப்படவில்லை என ஹமாஸ் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனால் வடக்கு காசாவில் அல் ஷிபா மற்றும் அல் குத்ஸ் எனும் 2 வைத்தியசாலைகள் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் புதிய நோயாளிகளுக்கு அனுமதியின்றி மூடப்பட்டுள்ளன.
அல்-ஷிபா வைத்தியசாலை கீழே ஹமாஸின் நிலத்தடி கட்டமைப்பு செயல்பட்டு வருவதாக இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இதை ஹமாஸ் அமைப்பு திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே அல்-ஷிபா மருத்துவ மனையில் ஹமாஸ் அமைப்பை சேர்ந்த ஒருவர் கூட இல்லை என்றும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை எரிபொருள் மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதால், முன்னரே அனுமதிக்கப்பட்டுள்ள பல நோயாளிகள் உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டுமின்றி, ஆங்காங்கே நடைபெறும் குண்டு வெடிப்புகளால், சுமார் 15 ஆயிரம் பேர் அங்கு புகலிடம் தேடி வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைத்தியசாலை வாசலிலேயே ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் இராணுவத்திற்கும் சண்டை நடப்பதாகவும் மக்கள் வெளியேற உதவுவதாக இஸ்ரேல் கூறுவது உண்மையில்லை என்றும் மருத்துவ பணியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும் வைத்தியசாலை வளாகத்தினுள் இடம்பெறும் ஒவ்வாரு அசைவுகளுக்கும் துப்பாக்கிச்சூடு பிரயோகம் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக இந்த வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மயக்கமருந்து பற்றாக்குறையினால் மருந்து செலுத்தாமலே சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.