6613 1
உலகம்செய்திகள்

ஹமாஸின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு

Share

ஹமாஸின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு

ஹமாஸ் படையினரின் 150 பதுங்கு குழிகளை இஸ்ரேலிய ராணுவம் அழித்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம்
இஸ்ரேல்-ஹமாஸ் படைகள் இடையே 22 நாட்களாக போர் தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இஸ்ரேலிய ராணுவ படை பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளது.

இதனால் பாலஸ்தீனத்தின் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் முடங்கியது இணைய சேவை: ஸ்டார்லிங்க் மூலம் எலான் மஸ்க் செய்த உதவி
காசாவில் முடங்கியது இணைய சேவை: ஸ்டார்லிங்க் மூலம் எலான் மஸ்க் செய்த உதவி
இதற்கிடையில் ஹமாஸ் உடனான போரானது கடினமானது மற்றும் நீண்ட காலம் நீடிக்க கூடியது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சமீபத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இஸ்ரேலிய விமானப்படை விமானங்கள் துல்லிய தாக்குதல் நடத்தி ஹமாஸ் படையினரின் 150 பதுங்கு குழிகளை அழித்து இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த துல்லிய தாக்குதலின் போது ஹமாஸ் அமைப்பினரின் வீரர்கள் பலர் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் எதிரிகளின் பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆகிய உள்கட்டமைப்பு வசதிகள் அழிக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...