rtjy 261 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது

Share

ஹமாஸ் அமைப்பினருக்கு ஏவுகணை ராக்கெட்டுகள் எப்படி கிடைத்தது

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுக்கள் தாமாகவே தயாரித்திருக்க கூடும் என நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 07.10.2023 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய 5000 ராக்கெட்டுகள் வீச்சு தாக்குதலே காஸாவில் நடந்து வரும் போரின் துவக்கப் புள்ளியாக அமைந்துள்ளது.

அவ்வாறான நிலையில், இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பின் பார்வையை மீறி வெளிநாடுகளில் இருந்து காசாவுக்குள் ராக்கெட்டுகளை கொண்டு வர சாத்தியமில்லை என நிபுணர்கள் கூறுகின்றனர்.

அப்படியானால் காசாவுக்குள்ளேயே தங்களுக்கு தேவையான “கசாம்” என்றழைக்கப்படும் ராக்கெட்டுகளை ஹமாஸ் போராளிகள் உருவாக்கி இருக்கலாம் என நிபுணர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

ஹமாஸ் அமைப்பினர் பயன்படுத்தும் ராக்கெட்டுகளின் மூலப் பொருட்களில் முதன்மையானது, வீடுகளில் பயன்படுத்தப்படும் சீனி மற்றும் அடுத்தபடியாக கடைகளில் உரமாக கிடைக்கும் பொட்டாஷியம் நைட்ரேட் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த இரண்டையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து ராக்கெட் உந்து எரிபொருள் தயாரிக்கப்பட்டதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனி மற்றும் உரத்தை சேர்த்த பின்பு தீயை மூட்டினால் அதிலிருந்து வெளிப்படும் ஆற்றலுடன் ஆக்ஸிஜன் வாயு கலந்து பின் அதினால் பிறப்பிக்கப்படும் சக்தி ராக்கெட் வேகமாக வானில் பறந்து செல்ல உதவும் என தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தபடியாக ஹமாஸ் போராளிகள் சாதாரண தண்ணீர் குழாய்களை கொண்டு ராக்கெட்டின் உடற்பகுதியை உருவாக்கி இருக்கிறார்கள் என குறிப்பிடப்படுகிறது.

அந்த குழாய்க்குள் யூரியா நைட்ரேட்டையும் டி.என்.டி.(T.N.T) வெடி பொருளையும் கலந்தது மட்டுமன்றி வெடிக்கும் போது சுற்றியுள்ள பலர் பலியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆணிகளையும் பால் பேரிங்குகளையும் கலந்திருப்பார்கள் என நம்பப்படுகிறது.

இலகுவாக மடக்கக் கூடிய ஏவுதளத்தில் விரும்பிய கோணத்தில் வைத்து ஏவப்படும் கசாம் ராக்கெட்டுகளில் வழிகாட்டு மின்னணுக் கருவிகள் இல்லை. இதனால் அவை எங்கே சென்று விழும் என்பது யாருக்கும் தெரியாது.

எனினும், இந்த திட்டத்திற்கு குறைந்த அளவிலான செலவினமே இருக்கின்றமையினால் கசாம் ராக்கெட்டுகளை ஆயிரக்கணக்கில் தயார் செய்து ஏவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் மறுபுறம் இந்த ராக்கெட்டுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள இஸ்ரேல் பல நூறு கோடிகளை செலவிட வேண்டிய நிலை இருப்பதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இஸ்ரேல் வசம் உள்ள அயர்ன் டோம் ராக்கெட் தடுப்பு அமைப்பில் பயன்படுத்தும் ஏவுகணை ஒவ்வொன்றின் விலையும் 1கோடி ரூபாய்க்கும் மேல் என இராணுவ தளபாட நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...