rtjy 215 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல்- ஹமாஸ் முதற்கட்டமாக 25 பிணைக்கைதிகள் விடுதலை

Share

இஸ்ரேல்- ஹமாஸ் முதற்கட்டமாக 25 பிணைக்கைதிகள் விடுதலை

இஸ்ரேல்– ஹமாஸ் ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக தாய்லாந்தை சேர்ந்த 12 பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் சிறை வைக்கப்பட்டிருந்த 12 பேர் விடுவிக்கப்பட்ட செய்தி அரசுக்கு கிடைத்துள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஸ்ரெட்டா தவிசின் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, இஸ்ரேலைச் சேர்ந்த 13 பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதற்கட்டமாக மொத்தம் 25 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தடுத்துவைத்துள்ள 7000 கைதிகளில் 39 பேரை இன்று இரவு விடுதலை செய்ய இஸ்ரேல் முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், அடுத்த 3 நாட்களில் 150 கைதிகளை விடுதலை செய்ய இஸ்ரேல் ஒப்பந்தம் செய்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் அமைப்பினர் வெளிநாட்டினர் உள்பட 250ற்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.

இதற்கிடையே பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் கட்டார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்தன.

இதில் பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்துவதாக இஸ்ரேல் அரசு அறிவித்தது.

இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட 50 பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Share
தொடர்புடையது
15 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நல்லதண்ணி – நுவரெலியா பிரதான வீதியில் மகிழுந்து விபத்து: மூவர் காயம்!

நல்லதண்ணி பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த மகிழுந்து ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 15...

14 12
செய்திகள்உலகம்

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்கள்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,444 ஆக உயர்வு!

கடந்த பிப்ரவரி 28-ஆம் திகதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து...

13 11
செய்திகள்உலகம்

ஈராக்கில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க விமானம்: நான்கு வீரர்கள் உயிரிழப்பு – அமெரிக்க இராணுவம் உறுதி!

மேற்கு ஈராக் வான்பரப்பில், அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘போயிங் KC-135 Stratotanker’ ரக எரிபொருள் நிரப்பும்...

12 12
செய்திகள்அரசியல்இலங்கை

இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுடன் பேச்சுவார்த்தை அவசியம் – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர் மோதல்கள் மற்றும் அவற்றால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கங்களைக்...