rtjy 199 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல்

Share

ஹமாஸின் திட்டத்தை அம்பலப்படுத்திய இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச்சென்ற பணையக்கைதிகளை வைத்து அவர்கள் தீட்டும் திட்டத்தை இஸ்ரேல் கண்டறிந்துள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஹமாஸ் அமைப்பினர் 240 பிணைக்கைதிகளை கடத்திச் சென்றனர். இந்நிலையில் காசாவில் பல்வேறு வைத்தியசாலைகள் இருக்கும்போது பிணைக்கைதிகளை குறிப்பாக அல்-ஷிபா வைத்தியசாலைக்குக்கொண்டு வரக் காரணம் ஹமாஸின் சுரங்க வலைபின்னலின் மையமாக அல்-ஷிபா வைத்தியசாலை இருக்கின்றமை என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அங்கிருந்து ஹமாஸ் அமைப்பினர் எளிதாக பிணைக்கைதிகளை இடமாற்ற இயலும் என்பதற்காகவே அல்-ஷிபா வைத்தியசாலையை ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தினர் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கமளித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் 47-வது நாளாகத் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்-ஷிபா மருத்துவமனையைச் சுற்றி நடந்த தாக்குதல் வைத்தியசாலைக்குள்ளும் தொடர்ந்தது.

இந்த நிலையில், அதில் ஹமாஸ் குழுவால் இஸ்ரேலில் இருந்து கடத்தி வரப்பட்ட பிணைக்கைதிகள் அல்-ஷிபா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளமை இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு வெளியிட்டுள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....