4 11
உலகம்செய்திகள்

ஹமாஸ் படைகளிடம் சிக்கிய பணயக்கைதிகள்… இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இறுகும் மக்கள் போராட்டம்

Share

ஹமாஸ் படைகளிடம் சிக்கிய பணயக்கைதிகள்… இஸ்ரேலில் நெதன்யாகு அரசுக்கு எதிராக இறுகும் மக்கள் போராட்டம்

இஸ்ரேலிய பணயக் கைதிகளின் குடும்பங்கள் மற்றும் அவர்களது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டவர்களின் அவலநிலை குறித்து அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்க ஐந்து நாள் பேரணியின் முடிவில் சனிக்கிழமை ஜெருசலேமை வந்தடைந்துள்ளனர்.

குறித்த 5 நாள் பேரணியில் சுமார் 20,000 பேர்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல் அவிவ்-ஜெருசலேம் பிரதான சாலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகு அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்க வேண்டும் என்றே பாதிக்கப்பட்ட மக்கள் பேரணியில் கலந்து கொண்டுள்ளனர். நெதன்யாகு அரசாங்கம் தங்களை சந்திக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் அவர்களின் திட்டம் என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இனிமேலும் காத்திருக்க முடியாது எனவும், உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அத்துடன் பணயக்கைதிகளை மீட்க எதையும் இழக்கவும் அரசாங்கம் தயாராக வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் படைகள் முன்னெடுத்த அதிரடி தக்குதலைத் தொடர்ந்து 240 இஸ்ரேலிய மக்களையும் பிடித்து சென்றனர். குறித்த தாக்குதல் சம்பவத்தில் 1,200 இஸ்ரேலிய மக்கள் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி இஸ்ரேல் முன்னெடுக்கும் தாக்குதல்களில் சிக்கி பணயக்கைதிகளாக இருப்பவர்களும் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தை அவர்களின் உறவினர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆனால் காஸா மீதான தாக்குதல் பணயக்கைதிகளை மீட்கும் பொருட்டு முன்னெடுப்பதாக இஸ்ரேல் அரசாங்கம் தரப்பு கூறி வருகிறது. இதனிடையே, ஹமாஸ் தாக்குதலை அடுத்து தங்கள் அரசாங்கம் கண்மூடித்தனமாக செயல்படுவதாக இஸ்ரேல் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இஸ்ரேல் தாக்குதலை அதிகரித்தால் பணயக்கைதிகள் கொல்லப்படுவார்கள் என தொடக்கத்தில் மிரட்டி வந்த ஹமாஸ், இஸ்ரேலிய தாக்குதலில் சில பணயக்கைதிகள் கொல்லப்பட்டதாக தற்போது தெரிவித்துள்ளது.

ஆனால், இஸ்ரேல் ராணுவத்திடம் பல ஆண்டுகளாக சிக்கி சிறையில் உள்ள 7,000 பாலஸ்தீன மக்கள் தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...