உக்ரைன் பயணிகள் விமானம்
உலகம்செய்திகள்

உக்ரைன் பயணிகள் விமானம்! கொத்தாக கொல்லப்பட்ட பல பேர்

Share

உக்ரைன் பயணிகள் விமானம்

உக்ரைன் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்திய விவகாரத்தில், சர்வதேச நீதிமன்றத்தை நாட கனடா, பிரித்தானியா, சுவீடன் மற்றும் உக்ரைன் நாடுகள் முடிவு செய்துள்ளன.

கடந்த 2020ல் ஈரானிய ராணுவத்தால் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரைன் பயணிகள் விமானம் தொடர்பில் கனடா உட்பட நான்கு நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஜனவரியில் தெஹ்ரான் அருகே உக்ரேனிய பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதில் 176 பேர் கொல்லப்பட்டனர். அதில் பயணம் மேற்கொண்ட கனடா, பிரித்தானியா, சுவீடன் மற்றும் உக்ரைன் நாட்டவர்களுக்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு, தற்போது ஈரானுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளனர்.

ஆனால், அந்த சம்பவம் ஒரு விபத்து என்றே ஈரான் கூறி வருகிறது. அது ஒன்றும் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் அல்ல எனவும் வாதிடுகின்றனர். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே அப்போது இருந்த பதட்டமான சூழலில், ரடாரில் ஏற்பட்ட கோளாறினால், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என ஈரான் தரப்பில் விளக்கமளிக்கப்படுகிறது.

ஆனால், 1971 மாண்ட்ரீல் மாநாட்டின் விதிகளின் கீழ் ஈரான் நடுவர் மன்றத்திற்கு அடிபணிய வேண்டும் என்று நான்கு நாடுகளும் முன்பு கோரின. மாண்ட்ரீல் மாநாட்டின் விதி என்பது சிவில் விமானப் போக்குவரத்துக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும் தண்டிக்கவும் நாடுகளுக்கு அனுமதி அளிக்கும் சர்வதேச ஒப்பந்தமாகும்.

இதனிடையே, ஈரானுக்கு எதிராக மக்களை இழப்பீடு கோர அனுமதிப்பதன் மூலம் கனடா சர்வதேச கடமைகளை மீறுவதாக குற்றம் சாட்டி சரவ்தேச நீதிமன்றத்தில் கனடாவுக்கு எதிராக ஈரான் வழக்கு தொடர்ந்துள்ளது.

ஈரானின் புகார் மனு தொடர்பில் ஆராய்ந்து உரிய பதிலளிக்கப்படும் என கனடாவும் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு, ஒன்ராறியோ நீதிமன்றம் ஒன்று, விமான விபத்தில் கொல்லப்பட்ட 6 கனேடியர்களுக்கு மொத்தம் 81 மில்லியன் டொலர் இழப்பீடு வட்டியுடன் வழங்க வேண்டும் என தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 683d2e2c6c0e6
செய்திகள்இலங்கை

இலங்கைத் தமிழர் விடிவு இந்திய அரசாங்கத்தால் மட்டுமே சாத்தியம்: யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் கருத்து!

இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான திருமாவளவன், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து...

images 15
செய்திகள்இலங்கை

உப குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் குறித்தும் சிறப்புப் பரிந்துரை!

அரச சேவையின் மறுசீரமைப்பு, முறையான வேதனைக் கட்டமைப்பை உருவாக்குதல், மற்றும் தொழில்முறையை மேம்படுத்துவதற்கான திட்டத்தை நிறுவுதல்...

Bribery Commission
செய்திகள்அரசியல்இலங்கை

அரகலய இழப்பீடு மோசடி: ₹100 கோடிக்கும் அதிகமான இழப்பீடு பெற்ற 42 முன்னாள் அமைச்சர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சட்ட நடவடிக்கை!

அரகலய போராட்டத்தின் போது வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக, 100 கோடிக்கும்...

ak am 2003
செய்திகள்அரசியல்இலங்கை

அர்ஜூன் மகேந்திரன், ராஜபக்ச சொத்துக்கள்: இரகசிய நடவடிக்கையில் இறங்கிய அரசாங்கம்

மத்திய வங்கிப் பிணைமுறி மோசடி தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை...