புலம் பெயர் தமிழரிடம் ரணில் மன்னிப்பு கோரவேண்டும் சாணக்கியன் சீற்றம்!!!
அரசியல்இலங்கைசெய்திகள்

புலம் பெயர் தமிழரிடம் ரணில் மன்னிப்பு கோரவேண்டும் சாணக்கியன் சீற்றம்!!!

Share

புலம் பெயர் தமிழரிடம் ரணில் மன்னிப்பு கோரவேண்டும் சாணக்கியன் சீற்றம்!!!

புலம் பெயர்ந்த தமிழரிடம் அதிபர் ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோரவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார்.

தேசிய கடன் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் நேற்றைய தினம் கலந்துகொண்டு ஆற்றிய உரையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார். அங்கு அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

பிரான்ஸ் நாட்டில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் போது அங்குள்ள புலம்பெயர் தமிழர் ஒருவர் ஆங்கிலத்தில் வைத்து எமது இன அழிப்பு பற்றிய கேள்விக்கு விடையளிக்க விரும்பாமல் தனக்கு விளங்கவில்லை ஆங்கிலம் தெரியாவிடின் தமிழில் கதைக்கும் படியும் கூறி இருந்தார்.

ஆங்கிலம் தெரியாவிடின் அது ஓர் பாரிய குற்றம் போல் சாடியிருந்தார். அவ் புலம்பெயந்தவர் அதிபர் 80 களில் கபினட் அமைச்சராக இருந்த காலத்தில் அச்சுறுத்தல் காரணமாக விரட்டி அடிக்கப்பட்டு புலம்பெயர்ந்து இருக்கலாம்.

அதிபரின் இந்த கருத்து தொடர்பில் புலம்பெயர் தேசத்தவரிடம் மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்துகின்றோம். ஆங்கிலம் என்பது வெறும் மொழிஅறிவு அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...