3 14
உலகம்செய்திகள்

மீண்டும் மீண்டும் வன்முறையில் பாகிஸ்தான்.. இந்தியா முன்வைக்கும் கடுமையான குற்றச்சாட்டு

Share

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று மாலை மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் சற்று முன்னர் வெளியிட்ட கருத்தில்,

“கடந்த சில மணிநேரங்களாக, இன்று மாலையில் நாங்கள் அடைந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மீண்டும் மீண்டும் மீறப்பட்டு வருகிறது. இது இன்று எட்டப்பட்ட தீர்மானத்தை மீறுவதாகும்.

எனவே, இந்தியாவின் ஆயுதப் படைகள் பொருத்தமான பதிலடியை அளித்து வருகின்றன” என்று மிஸ்ரி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “இந்த மீறல்களை நிவர்த்தி செய்வதற்கும், நிலைமையை தீவிரமாகவும் பொறுப்புடனும் கையாளுவதற்கும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா கேட்டுக்கொள்கிறது” என்று மிஸ்ரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் எல்லை மற்றும் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர்நிறுத்த மீறல்களை வலுவாகக் கையாள இந்திய இராணுவத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், மிஸ்ரியின் குற்றச்சாட்டுகளுக்கு பாகிஸ்தான் இன்னும் பகிரங்கமாக பதிலளிக்காத நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இன்று இது தொடர்பில் உரையாடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
6 15
இலங்கைசெய்திகள்

முதலீட்டாளர்களுக்கான வரிச் சலுகைகள் தொடர்பில் IMF முக்கிய நிபந்தனை

இலங்கையுடன் விரிவான கடன் திட்டத்தில் ஈடுபட்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு மற்றொரு...

5 14
உலகம்செய்திகள்

ரஸ்யாவுக்கு எதிராக பிரித்தானியா விடுத்துள்ள பாரிய தடை

பிரித்தானியா, ரஷ்யாவிற்கு எதிராக வரலாற்றிலேயே மிகப்பாரிய தடைகளை அறிவித்துள்ளது. இதற்கமைய, ரஷ்யாவிற்காக இரகசியமாக இயங்கும் எண்ணெய்...

4 13
உலகம்செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போரில் புதிய திருப்பம்.. பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

இந்தியாவுடன் ஆக்கபூர்வமான ராஜதந்திரத்தில் ஈடுபட பாகிஸ்தான் தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் இன்று...

2 22
உலகம்செய்திகள்

பாகிஸ்தானின் தாக்குதல் குற்றச்சாட்டை மறுத்த ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தானை குறிவைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியமை தொடர்பில் சர்ச்சைகள் வலுத்துள்ளது....