ஆப்கானிஸ்தானுக்கு உதவுங்கள் – சீனா, பாகிஸ்தான் கூட்டுக் கோரிக்கை
சீன அதிபரும், பாகிஸ்தான் பிரதமரும் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.
சீன அதபர் ஜின்பிங்குடன், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைபேசியில் கலந்துரையாடியுள்ளார்.
இக்கலந்துரையாடலின் பின்னர், ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிகளை வழங்க முன்வர வேண்டுமென, உலக நாடுகளுக்கு, இரு நாட்டுத் தலைவர்களும் அழைப்பு விடுத்துள்ளனர்.
குறித்த சந்திப்பில் சீனா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பொருளாதார உறவுகளை பலப்படுத்துவது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#world
Leave a comment