image 03e18528aa
உலகம்செய்திகள்

கடும் பனியில் உறைந்தது நயாகரா

Share

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பனி சூறாவளிக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டியது.

மேலும் சுமார் 50 வருடங்களுக்குப்பின் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் பனியில் உறைந்து போய் காணப்படுகின்றது.

அமெரிக்காவில் கடந்த நான்கு நாட்களாக பனி சூறாவளி வீசுகிறது. நாடு முழுவதும் வெப்பநிலை மைனஸ் டிகிரியை தொட்டிருக்கும் நிலையில் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கடும் பனிப்பொழிவால், வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள் பனியில் உறைந்துள்ளன. மின்சாரம் தடைபட்டுள்ளது.

போக்குவரத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பனி சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஐ தாண்டி உள்ளது. பனிப்பொழிவு காரணமாக பலர் வாகனங்களிலேயே சிக்கி உயிரிழந்துள்ள காட்சிகள் வெளியாகி உள்ளன.

ஐந்து தசாப்தங்களில் அமெரிக்காவை தாக்கிய மிக மோசமான பனிப்புயல் இதுவாகும்.

இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக ஒவ்வொரு வினாடிக்கும் 3,160 டன் அளவுக்கு அதிக அளவு தண்ணீர் வரும் நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதியும் உறைந்து போய் காணப்படுகிறது.

சில இடங்களில் மட்டும், நீர்வீழ்ச்சியில் உள்ள பனிக்கட்டிகளையும் தாண்டி தண்ணீர் கொட்டும் காட்சிகளும், வீடியோக்களும் வெளியாகி உள்ளது.

நியூயோர்க் மாநிலத்தில் வீசிய பனிப்புயல் 50 ஆண்டுகளில் மாநிலத்தில் தாக்கிய மிக மோசமான பனிப்புயல் என்று நம்பப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...

Melania Trump
உலகம்

ஈரானின் அடுத்த இலக்கு – ட்ரம்ப் குடும்பத்திற்கு உச்ச கட்ட பாதுகாப்பு.

ஈரானின் உச்சத் தலைவர் மற்றும் மூத்த அதிகாரிகள் கொல்லப்பட்ட கூட்டுத் தாக்குதலுக்கு பின்னர், ஈரானின் முக்கிய...

European Union ggg
உலகம்உலகம்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த டொனால்ட் ட்ரம்ப்

ஐரோப்பிய ஒன்றியம், கூகுள் நிறுவனம் தனது தேடல் முடிவுகளில் சொந்த சேவைகளுக்கு முன்னுரிமை அளித்ததாகவும், ஐரோப்பிய...

arrested woman with handcuffs
உலகம்

நேட்டோவை உளவு பார்த்த சீன பெண்!

பெல்ஜியத்தின் மான்ஸ் பகுதியில் அமைந்துள்ள ‘ஷேப்’ எனப்படும் நேட்டோ இராணுவத் தலைமையகத் தளத்தில் பயிற்சிப் பணியாளராக...