கூகுள் (Google) நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ செயலியில் உள்ள ‘ஜி’ சின்னத்தைப் புதுப்பித்துள்ளது.
கடந்த 10 வருடங்களில் முதன்முறையாக இவ்வாறு ‘ஜி’ சின்னத்தை புதுப்பித்துள்ளது.
ஐஃபோன் பயனர்கள் மற்றும் கூகுளின் பிக்சல் தொலைபேசி பயனர்களுக்கு தற்போது இந்த சின்னம் புதுப்பிக்கப்பட்ட வடிவில் காட்சியளிக்கிறது.
ஏனைய தொலைபேசிகளுக்கு விரைவில் புதுப்பிக்கப்பட்ட சின்னம் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.