30 4
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் உயிரிழந்த காதலர்கள் தொடர்பில் தகவல்

Share

தென்னிலங்கையில் சம்பவித்த கோர விபத்தில் உயிரிழந்த இளம் காதலர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

மாத்தறையில் வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் பேருந்துடன் மோதுண்டமையினால் விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து தெவிநுவர நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அவர்கள், மாத்தறையிலிருந்து திஸ்ஸமஹாராம நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் பின்புற சக்கரங்களுக்கு அடியில் சிக்கி நசுங்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் அலஸ்வத்தை பகுதியைச் சேர்ந்த 30 வயதான விக்ரமசிங்க கமச்சிகே, பொல்ஹேன காசிவத்தபுரத்தைச் சேர்ந்த 23 வயதான எதிரிசிங்க எமெல்ஷி ஹவிஸ்கா டயஸ் என்ற யுவதியும் உயிரிழந்துள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த காதலன் சதொச கிளையில் காசாளராக பணியாற்றி வரும் நிலையில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
hgfn
இலங்கை

வெள்ள அபாயம் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை.

மகாவலி கங்கையை அண்டிய தாழ்நிலப் பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களில் பெருவெள்ள நிலைமை ஏற்படுவது குறித்த...

vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...