rtjy 228 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர்

Share

ஹமாஸ் திடீர் தாக்குதல்: இஸ்ரேல் தரையில் பதுங்கிய ஜேர்மன் பிரதமர்

இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய போது, ஏவுகணை தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக தரையில் பதுங்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் படையினருக்கு இடையிலான போர் தாக்குதல் 13ஆவது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பினரை ஒட்டுமொத்தமாக அழிக்கும் நோக்கில் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது சரமாரி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் ஹமாஸ் அமைப்பினருடனான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் இஸ்ரேலுக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக அந்த நாட்டிற்கு சென்று இருந்த ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் கடந்த 17ம் திகதி நாடு திரும்புவதற்காக இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அப்போது ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதால் விமான நிலையத்தில் அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பபட்டது.

இதனால் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ், பாதுகாப்பு காரணங்களுக்காக தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சில நிமிடங்களுக்கு பிறகு அவர் விமானத்தில் ஜேர்மனிக்கு புறப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...