24 66bfb396433db
உலகம்

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

பங்களாதேஷ் இடைக்கால அரசில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பங்களாதேஷின் (Bangladesh) இடைக்கால அரசில் மேலும் நான்கு ஆலோசகர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஷேக் ஹசீனா (Sheikh Hasina) தனது பிரதமர் பதவியை பதவிவிலகல் செய்துவிட்டு இந்தியாவில் (India) தஞ்சம் அடைந்த நிலையில் பங்களாதேஷ் இராணுவம் இடைக்கால அரசு அமைக்கப்படும் என அறிவித்திருந்தது.

அதன்படி நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) தலைமையில் இடைக்கால அரசை இராணுவம் அமைத்தது.இந்த இடைக்கால அரசில் 17 ஆலோசகர்கள் இடம்பிடித்திருந்தனர்.

இந்த நிலையில் தற்போது மேலும் 4 பேர் இடைக்கால அரசில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வல்லுனர் வஹிதுதீன் மெஹ்மூத் (Wahiduddin Mehmood), முன்னாள் அமைச்சரவை செயலாளர் அலி இமாம் மஜும்தார் (Ali Imam Majumdar), முன்னாள் மின்துறை செயலாளர் முகமது பொளஜுல் கபிர் கான் (Muhammad Polajul Kabir Khan), லெப்டினன் ஜெனரல் ஜஹாங்கீர் அலாம் சவுத்ரி (Jahangir Alam Chowdhury) ஆகியோர் இவ்வாறு இடைகால அரசில் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...