வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பேரோ தீவில் ஒரே நாளில் ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய திருவிழாவை கொண்டாடும் முகமாக பேரோ தீவு மக்கள் படகுகள் மூலம் ஆயிரத்து 428 டொல்பின்களை பிடித்து வந்து கரைக்கு கொண்டுவந்த பின்னர் அவற்றை ஒவ்வொன்றாக கொன்று குவித்துள்ளனர்.
இதனால் அந்த கடற்கரை முழுவதும் இரத்தம் சிந்தப்பட்டு நீர் முழுவதும் இரத்தக்களறியாகி காட்சியளித்துள்ளது.
கடந்த 4 நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த பாரம்பரிய திருவிழா நடந்து வருகின்றது எனவும் இதனைப் பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் திரளுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான டொல்பின்களை கொன்றமைக்காக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கடல்சார் உயிரின பாதுகாப்பு அமைப்புக்கள் கடும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன.
எனினும் தங்கள் உணவுத் தேவைக்காக மற்றும் தங்கள் உரிமையைப் பாதுகாக்க போராடுவோம் என அந்தத் தீவுவாசிகள் தெரிவிக்கின்றனர்.
டொல்பின்களின் குருதி கடற்கரையையே சிவப்பு நிறத்தில் மாற்றியுள்ள காட்சி தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.
Leave a comment