Squirrel
உலகம்செய்திகள்

கருணைக் கொலை செய்யப்பட்ட அணில்: ஏன் தெரியுமா?

Share

பிரித்தானியாவில் அணில் ஒன்று கருணைக் கொலை செய்யப்பட்டுள்ளது. மனிதர்களைக் கடித்தமைக்காகவே கொலை செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியா- பிளின்ட்ஷயர், பக்லி பகுதிகளில் சாம்பல் அணில் ஒன்று 18 நபர்களைக் கடித்த நிலையில், உள்ளூர் மக்களால் ‘ஸ்ட்ரைப்’ என குறித்த அணில் அழைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அணிலால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கூறுகையில்;

நான் அந்த அணிலுக்குக் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு கொடுத்து வந்தேன். என்னோடு நட்புடன் தான் இருந்ததது. ஆனால், கடந்த வாரம் நான் உணவளிக்கும்போது அது என் விரலைக் கடித்தது.

மேலும் பலரை இம்மாதிரியே அந்த அணில் கடித்துள்ளதாக எனக்குத் தகவல் கிடைத்தது என்று கூறியுள்ளார்.

இந்தநிலையில் கால்நடை மருத்துவர்களால் அந்த அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்செய்தி வெளியானதிற்குப்பின்னர் அணில் கருணைக் கொலை செய்யப்பட்டதை விலங்குகள் நல ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.

#WorldNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
codf 1671799699
உலகம்செய்திகள்

16 ஆண்டுகால திருமண பந்தம் முறிவு: முடி கொட்டியதால் மனைவியை கைவிட்ட கணவன் – சீனாவில் ஒரு சோகம்!

சீனாவில் 16 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த தனது மனைவிக்கு ஏற்பட்ட சரும நோயால் முடி கொட்டியதைக்...

Federal Agents Descend On Minneapolis For Immigration Enforcement Operations 7k32by6s
செய்திகள்உலகம்

செவிலியர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: மினியாபோலிஸிலிருந்து கூட்டாட்சி முகவர்களைத் திரும்பப் பெறுவதாக ட்ரம்ப் அறிவிப்பு!

மினியாபோலிஸில் கடந்த சனிக்கிழமை குடியேற்றத் தடுப்பு (ICE) முகவர்களால் அலெக்ஸ் ப்ரெட்டி (Alex Pretti) என்ற...

ee7e61464b5b4490d5c599b30cd7e766d8fa313e 16x9 x0y0w1280h720
உலகம்செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்: கால்பந்து மைதானத்தில் துப்பாக்கிச் சூடு – சிறுவன் உட்பட 11 பேர் பலி!

மத்திய மெக்சிகோவின் குவானாஜுவாடோ (Guanajuato) மாநிலத்தில் உள்ள சாலமன்கா நகரில், கால்பந்து மைதானம் ஒன்றில் புகுந்த...

MediaFile 7 4
செய்திகள்உலகம்

உலகப் பொருளாதாரத்தில் புதிய வரலாறு: 5,000 டொலர்களைக் கடந்தது தங்கம்! வெள்ளி மற்றும் பெலேடியமும் அதிரடி உயர்வு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வரலாற்றில் முதல் முறையாக 5,000 அமெரிக்க டொலர் என்ற பிரம்மாண்டமான...