ezgif 3 cf92aa496e
உலகம்செய்திகள்

ஊழியர் பணிநீக்கம்! – வேல்ட் டிஸ்னி நிறுவனமும் இணைந்தது

Share

கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு ஏற்பட்டுள்ள பொருளாதார சூழல் காரணமாக டுவிட்டர், மெட்டா நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை பணிநீக்கம் செய்தது.

இந்தாண்டு தொடக்கம் முதல் அமேசான், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பல ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ந்து நீக்கி வருகின்றன.

இதற்கிடையே, உலகளாவிய மிகப்பெரிய கேளிக்கை பூங்கா நிறுவனம் வேல்ட் டிஸ்னி. பல்வேறு நாடுகளில் வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 5.5 அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வேல்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.

7 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பை டிஸ்னி விரைவில் வெளியிட உள்ளது. ஏற்கனவே கொரோனா காலத்தில் 2020-ம் ஆண்டு வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
11 2
இலங்கைசெய்திகள்

இலங்கையில் விசர்நாய் கடியை முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம்

இலங்கையிலேயே விசர்நாய் கடியை (Rabies) முழுமையாக ஒழித்த முதல் மாவட்டம் என்ற சிறப்பு அந்தஸ்தை அநுராதபுரம்...

12 2
இலங்கைசெய்திகள்

நெடுந்தூரப் பேருந்துகள் தொடர்பில் புதிய நடைமுறை

நெடுந்தூரப் பேருந்துகள்(Long-Distance Buses) தேநீர் அருந்த நிறுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில், உணவு மற்றும் பானங்கள்...

13 2
இலங்கைசெய்திகள்

வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள உலக குழுக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அநுர அரசு

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் U.F உட்லர், ரஷ்யாவில் ஒரு பாடநெறிக்காக நாட்டை விட்டு வெளியேறிய நிலையில்...

10 2
இந்தியாசெய்திகள்

விஜய்யின் கைது விவகாரம்! தமிழ்நாட்டின் முக்கிய சட்டத்தரணி வெளிப்படை

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அவர்களது நிர்வாகிகள் கைது செய்யப்படுவார்களாயின் அது அரசியல்...