கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்
இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், இன்று(1)இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.
அவர் கடைசியாக மே 22 அன்று ஐபிஎல் 2024 எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
தனது எக்ஸ் பக்கத்தில் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர், அந்த குறிப்பில் “கடந்த சில நாட்களாக எனக்கு கிடைத்த பாசம், ஆதரவு மற்றும் அன்பினால் நான் மூழ்கிவிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய அனைத்து ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் மனமார்ந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.
26 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தினேஷ் கார்த்திக் 25 சராசரியில் 1025 ஓட்டங்களை பெற்றுள்ளார்.அவரது அதிகபட்சம் 129 ஓட்டங்கள் மற்றும் 1 சதமும் அடித்துள்ளார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில்,இந்தியாவுக்காக 94 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 39 சராசரியுடன் 1752 ஓட்டங்கள் பெற்றுள்ளதோடு அவரது அதிகபட்ச ஸ்கோர் 79 ஆகும்.
ரி20 களில் 2006-2022 க்கு இடையில், K இந்தியாவுக்காக 60 ரி20போட்டிகளில் விளையாடி 686 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் மற்றும் அவரது அதிகபட்சம் 55 ஓட்டங்கள் அவரது சராசரி 26.38 ஆகும்.
ஐபிஎல்: 2008-2024க்கு இடையில், 257 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 26.32 சராசரியில் 4842 ஓட்டங்கள் பெற்றுள்ளதுடன் அவரது அதிகபட்ச ஸ்கோர் 97 ஓட்டங்களாகும்.
இந்திய அணியில் 2004 முதல் விளையாடி வரும் இவர் ஐபிஎல்லின் ஆரம்பத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.
பின்னர் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், குஜராத் லயன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடியதோடு இறுதியாக பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.