கொவிட் இறப்பு வீதம் 15 வீதத்தால் அதிகரிப்பு!!
தெற்காசிய வலயத்தில் கொரோனா இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனத்தால் வாராந்தம் வௌியிடப்படும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில் 15 வீதத்தால் அதிகரித்துள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில் இலங்கையில் 19 வீதத்தாலும் இந்தியாவில் 17 வீதத்தாலும் திமோர்-லெசுடேயில் 32 வீதத்தாலும் இறப்பு வீதம் அதிகரித்துள்ளது என குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் தெற்காசிய பிராந்தியத்தில் 14 ஆயிரம் கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஓப்பீட்டளவில் இது 20 வீத வீழ்ச்சி எனவும் கூறப்பட்டுள்ளது.
Leave a comment