china 2
உலகம்செய்திகள்

60 ஆயிரம் அடி உயரத்தில் சீன உளவு பலூன் – புகைப்படத்தை வெளியிட்டது அமெரிக்கா

Share

பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள அந்த நாட்டின் ராணுவ தளங்களின் மீது சீன உளவு பலூன் பறக்க விடப்பட்டு, அது தெற்கு கரோலினாவில் ஏவுகணை தாக்குதல் நடத்தி அட்லாண்டிக் பெருங்கடலில் வீழ்த்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த உளவு பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்துவதற்கு முன்பாக, 60 ஆயிரம் அடி உயரத்தில், அதைக் கண்காணித்த ‘எப்-2 ராப்டர்’ போர் விமானத்தின் விமானி எடுத்த ‘செல்பி’ படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் வெளியிட்டுள்ளது.

அந்தப் படம் சீன உளவு பலூனின் மர்மமான வெள்ளை கோளத்தில் பேனல்கள் தொங்குவதைக் காட்டுகிறது. பலூனுக்கு எதிராக தாக்குதல் தொடுத்த அமெரிக்க விமானத்தின் நிழலின் ஒரு குறிப்பிடத்தக்க காட்சியையும் அது வெளிப்படுத்தியது.

இந்த ‘செல்பி’ படம், அமெரிக்க கண்டத்துக்கு மேலே உள்ள வான்வெளியில் அதிக உயரத்தில் பலூன் நுழைந்தபோதே, விமானப்படை வீரரால் எடுக்கப்பட்டது என்று சி.என்.என். தெரிவித்துள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25
இலங்கைசெய்திகள்

அர்ச்சுனாவின் தலைவர் பிரபாகரன்! மகிந்தவை மையப்படுத்தி நாமல் கொடுத்த சாட்டையடி!

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் தனக்கும் அரசியல் ரீதியாக வேறுபாடுகள் உள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுன...

24
இலங்கைசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு! நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் – அரியாலை, சித்துப்பாத்தி – செம்மணி மனிதப் புதைகுழி வழக்கு 13 ஆம் திகதிக்கு...

23
இலங்கைசெய்திகள்

இலங்கைக்குள் ஊடுருவி உள்ள ஆபத்தான நபர்! மக்களின் உதவியை நாடும் காவல்துறை

2016 ஆம் ஆண்டு இலங்கை கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய ஹெரோயின் தொகையுடன் தொடர்புடைய பாகிஸ்தானியரைக்...

22
இந்தியாசெய்திகள்

ஆட்டத்தை ஆரம்பித்த திமுக – தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தனிப்படை

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அக்கட்சியின் மாநில இணைச் செயலாளர்...