rtjy 299 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு உரிமை உண்டு: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சீனா

Share

இஸ்ரேலுக்கு உரிமை உண்டு: நிலைப்பாட்டை வெளிப்படுத்திய சீனா

இஸ்ரேல் தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது என சீனா தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நிறுத்தம் குறித்து சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடந்த வாரம் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனையடுத்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ‘ஒவ்வொரு நாட்டுக்கும், தன்னை பாதுகாத்து கொள்ள உரிமை உள்ளது’ என தெரிவித்துள்ளார். ஹமாஸ் தாக்குதலில் 1,400 இஸ்ரேல் மக்கள் பலியாகியுள்ளனர்.

அதேபோல் இஸ்ரேலின் தாக்குதலில் 5,100 பாலஸ்தீன மக்கள் உயிரிழந்திருந்தனர். இந்த தொடர் மோதலால் அதிக எண்ணிக்கையிலான மக்கள் பாதிக்கப்படுவது ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா ஆதரவு வழங்கும் நாடுகளுக்கு சீனா எதிர் நிலைப்பாட்டினை எடுக்கின்றமை வழமை.

இந்த முறை இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ள நிலையில் சீனாவும் அதற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளமை பலராலும் உண்ணிப்பாக அவதானிக்கப்படுகிறது.

உக்ரைனை – ரஷ்ய போரில் அமெரிக்கா உக்ரைனை ஆதரித்த நிலையில் அதற்கு எதிர்மாராக சீனா ரஷ்யாவை ஆதரித்தது.

இந்த நிலையில் இஸ்ரேல்- ஹமாஸ் யுத்தத்தின்போது சீனாவின் கருத்தானது மிகவும் உண்ணிப்பாக அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடு முழுவதும் 28,000-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை: 763 பேர் கைது எனப் பொலிஸார் அறிவிப்பு!

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் நேற்று (09) முன்னெடுக்கப்பட்ட...

world 62
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்டாவில் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான தரமற்ற அழகுசாதனப் பொருட்கள் பறிமுதல்!

கொழும்பு, பெட்டா பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, எவ்வித லேபிள்களும் இன்றி வைக்கப்பட்டிருந்த சுமார் 10...

world 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சர்ச்சைக்குரிய மருத்துவ நியமன நடைமுறை: மே 8 ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவு!

சர்ச்சைக்குரிய உள்ளகப் பயிற்சிக்குப் பிந்தைய மருத்துவ நியமன நடைமுறைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை விசாரணைக்கு...

world 60
செய்திகள்இலங்கை

புத்தாண்டு தினங்களில் நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில்...