கனடா பிரதமரை கேலி செய்த எதிர்க்கட்சித் தலைவர்
G 20 உச்சி மாநாட்டுக்காக இந்தியாவுக்குச் சென்ற கனடா பிரதமரிடம், இந்திய பிரதமர் கனடாவில் காலிஸ்தான் அமைப்பினர் இந்திய தூதரக அதிகாரிகளை அச்சுறுத்துதல் முதலான விடயங்கள் குறித்துப் பேச, மற்ற நாடுகளின் தலைவர்களோ அவரைக் கண்டுகொள்ளவே இல்லை என கேலி செய்துள்ளார் கனடா எதிர்க்கட்சித் தலைவர்.
கனடா எதிர்க்கட்சித் தலைவரும், அடுத்து கனேடிய பிரதமராகலாம் என எதிர்பார்க்கப்படு வருமான கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Pierre Poilievre, முந்தைய ட்விட்டர், இந்நாள் எக்ஸில் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் நிற்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவேற்றம் செய்து, இப்படி ஒரு அவமானம் யாருக்கும் ஏற்படக்கூடாது என கேலி செய்துள்ளார்.
அந்த புகைப்படத்தில் ட்ரூடோ சின்சியராக புகைப்படத்துக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்க, மோடியோ, வேறு யாரையோ பார்த்து கைநீட்டி பேசி புன்னகைத்துக்கொண்டிருக்கிறார்.
வெளியே போகும் வழி இதுதான் என மோடி ட்ரூடோவிடம் சொல்வது போல அந்த புகைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு நாட்கள் நடைபெற்ற உச்சி மாநாட்டில் கனடா பிரதமர் ட்ரூடோவை யாரும் கண்டுகொள்ளவில்லை என பல தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரீமியர் ஃபுமியோ கிஷிடா ஆகியோர் இந்திய பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையில், ட்ரூடோ புறக்கணிக்கப்பட்டதாகவும், தற்செயலாக தலைவர்கள் சந்தித்த போது பேசினார்களேயொழிய, யாரும் முக்கியத்துவம் கொடுத்து ட்ரூடோவிடம் பேசவில்லை என்றும் கூறப்படுகிறது.
அதைத்தான் கனடா எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre, இப்படி கனேடிய பிரதமர் மற்ற உலகத்தலைவர்களால் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதைப் பார்க்க யாருக்கும் விருப்பமில்லை என கேலி செய்துள்ளார்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.
Comments are closed.