சினிமாசெய்திகள்

என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்! குஷ்புவின் பதிவு

Share

என் மகளும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்! குஷ்புவின் பதிவு

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ஏ.ஆர் ரகுமான் நடத்திய இசை கச்சேரி தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. பல ஆயிரம் கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கும் பலருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்று இருக்கின்றனர்.

மேலும் அந்த பகுதியில் பெரிய அளவில் டிராபிக் ஜாம் ஏற்பட்டதும் சர்ச்சையாகி இருக்கிறது. இதை பற்றி தற்போது சென்னை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரசிகர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக ரஹ்மான் மன்னிப்பு கோரி இருந்தார்.

இந்த சர்ச்சை பற்றி பல்வேறு பிரபலங்கள் ரஹ்மானை விமர்சித்து வரும் நிலையில் ஆதரவாகவும் சிலர் தற்போது குரல் கொடுக்க தொடக்கி இருக்கின்றனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தற்போது ரகுமான ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது நடிகை குஷ்பூ இந்த சர்ச்சை பற்றி ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார். தனது மகளும் அந்த இசை கச்சேரிக்கு சென்ற நிலையில் அனுமதி மறுக்கப்பட்டதா தெரிவித்திருக்கிறார்.

“Gateக்கு செல்வதற்கு மூன்று மணி நேரம் ஆகியிருக்கிறது. ஆனால் டைமண்ட் பாஸ் வைத்திருந்தும் என் மகள் மற்றும் அவரது தோழிகளை உள்ளே அனுமதிக்கவில்லை.”

“ஆனால் இந்த பிரச்சனைக்கு ஏ.ஆர் ரகுமான் பொறுப்பல்ல. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சரியான management செய்யாததே இதற்கு காரணம்” என குஷ்பு பதிவிட்டு இருக்கிறார்.

Share
தொடர்புடையது
images 20
இலங்கைசெய்திகள்

டிட்வா சூறாவளி நிவாரணம்: பாகிஸ்தான் 7.5 டன் மேலதிக உதவிகளை இலங்கைக்கு அனுப்பியது!

‘டிட்வா’ சூறாவளியால் இலங்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் மொஹமட் ஷபாஸ் ஷெரீப்பின் பணிப்புரையின்...

சினிமாபொழுதுபோக்கு

ரன்வீர் சிங்கின் ‘துரந்தர்’ முதல் 3 நாட்களில் உலகளவில் ரூ. 160.15 கோடி வசூல்!

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள ‘துரந்தர்’ (Durandhar) திரைப்படம், திரைக்கு வந்த...

3659285
சினிமாபொழுதுபோக்கு

எல்லோரையும் தொந்தரவு செய்யாதீர்கள்: மலேசிய கார் ரேஸில் ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்!

நடிகர் அஜித்குமார் தற்போது மலேசியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கார் ரேஸ் போட்டியில் (Car Race) பங்கேற்றுள்ள...

25 681d8a41ab078
சினிமாபொழுதுபோக்கு

தலைவர் 173 திரைப்படத்தில் சாய் பல்லவி: ரூ. 15 கோடி வரை சம்பளம்?

தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு மிகவும் தனித்துவமான நடிகையாகத் திகழும் சாய் பல்லவி, தற்போது சூப்பர் ஸ்டார்...