5ஜி நெட்வேர்க் சேவையை வழங்கி வரும் ‘ஹூவாய்’ நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது குறித்து இன்னும் சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் 4ஜி நெட்வேர்க்கே பயன்பாட்டில் உள்ளது.
ஆனால் சில நாடுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்று 5ஜி வயர்லெஸ் நெட்வேர்க்கை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
5ஜி நெட்வேர்க் சேவையை பயன்படுத்துவதால், தங்களுடைய நாட்டின் ரகசியங்கள் திருடப்படுவதாக பெரும்பாலான நாடுகள் இச் சேவைக்கு அனுமதி கொடுக்காமல் இருக்கின்றன.
ஹூவாய் நிறுவனத்தின் மீது அமெரிக்காவும் இது குறித்து குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் கனடாவில் 5ஜி நெட்வொர்க் வழங்க ஹூவாய் நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் சில வாரங்களில் முடிவு செய்யப்படும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியாவில் 5ஜி நெட்வேர்க் சேவையை சோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் 5ஜி சேவையை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment