gettyimages 1013313124
உலகம்செய்திகள்

மூதாட்டியின் உடலுடன் விமானத்தில் ஏற முயன்ற பிரித்தானிய குடும்பம்: கேட்விக் விமானத்தில் நிகழ்ந்த பரபரப்பு!

Share

ஸ்பெயினிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்தில், உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை உயிருடன் இருப்பவர் போலச் சக்கர நாற்காலியில் ஏற்றிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த டிசம்பர் 18 அன்று, ஸ்பெயினின் மலகா நகரிலிருந்து லண்டனின் கேட்விக் நோக்கிப் பயணிக்கவிருந்த விமானத்தில் ஒரு பிரித்தானிய குடும்பம் நுழைந்தது. அவர்கள் தங்களது 89 வயது மூதாட்டியைச் சக்கர நாற்காலியில் அழைத்து வந்தனர். மூதாட்டி மிகவும் சோர்வாகவும், உடல்நலம் பாதிக்கப்பட்டும் இருப்பதாக ஊழியர்களிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

விமானத்திற்குள் மூதாட்டி எவ்வித அசைவும் இன்றி அமர்ந்திருப்பதை அவதானித்த சக பயணிகளும், விமானப் பணிப்பெண்களும் சந்தேகம் அடைந்து உடனடியாக விமானிக்குத் தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, புறப்படத் தயாராக இருந்த விமானம் மீண்டும் முனையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது. அங்கு வந்த மருத்துவக் குழுவினர் மூதாட்டியைப் பரிசோதித்தபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டமை உறுதி செய்யப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து ஈசி ஜெட் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் மூதாட்டி பயணம் செய்யத் தகுதியானவர் என்பதற்கான ‘Fit to Fly’ மருத்துவச் சான்றிதழை வைத்திருந்ததாலேயே அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த அசாதாரணச் சூழல் காரணமாக விமானம் சுமார் 12 மணிநேரம் தாமதமாகவே புறப்பட்டது.

உயிரிழந்த உடலை விமானத்தில் கடத்த முயன்றது ஏன் என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அதேவேளை, உடல் நலம் பாதிக்கப்பட்ட பயணிகளை அனுமதிக்கும் நடைமுறைகளை விமான நிறுவனங்கள் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனப் பயணிகள் தரப்பிலிருந்து அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

 

 

Share
தொடர்புடையது
09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...

07 1
செய்திகள்உலகம்

மொஸ்கோவில் அதிர வைத்த தற்கொலைத் தாக்குதல்: காவல்துறை அதிகாரி பலி; உக்ரைன் போர் ஆண்டு நிறைவில் பதற்றம்!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள சவ்யோலேவ்ஸ்கி (Savyolovsky) தொடருந்து நிலையம் அருகே, நள்ளிரவு வேளையில் நடத்தப்பட்ட...

06 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், இரத்தினங்களை ஒரு வாரத்திற்குள் ஒப்படைக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய...