08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

Share

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் ஒருவரைச் சுன்னாகம் பொலிஸார் துரித விசாரணைகளை அடுத்துக் கைது செய்துள்ளனர்.

நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரை வழிமறித்த இனந்தெரியாத நபர், அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை லாவகமாகப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகச் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டையடுத்துச் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் விசேட பொலிஸ் குழுவினர் விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர். கண்காணிப்பு கேமரா (CCTV) பதிவுகள் மற்றும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையில், மைலிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவச் சிப்பாய் ஒருவர் இக்குற்றத்துடன் தொடர்புடையவர் என்பது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரே இத்தகைய செயலில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...