bfgh
உலகம்செய்திகள்

நியூசிலாந்தில் ஐ.எஸ்ஸூடன் தொடர்புடைய இலங்கையர் சுட்டுக்கொலை!!

Share

நியூஸிலாந்திலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்பொருள் அங்காடியொன்றில் மக்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே, பொலிஸார் இந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்த நாட்டு பொலிஸாரின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருந்த இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை கொண்ட இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலானது, ஒரு தீவிரவாதத் தாக்குதல் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இந்த நபர், 2016 ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...