24 66adb43e776af
உலகம்செய்திகள்

4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனை

Share

பரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் 4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

பந்தைய தூரத்தை மூன்று நிமிடங்கள் 7.41 வினாடிகளில் கடந்த அமெரிக்கா இந்த சாதனையை ஒலிம்பிக் அரங்கில் பதித்துள்ளது.

வெர்னான் நார்வூட், ஷமியர் லிட்டில், பிரைஸ் டெட்மன் மற்றும் கெய்லின் பிரவுன் அடங்கிய அமெரிக்க அணியே இந்த சாதனையை படைத்துள்ளது.

2023ஆம் ஆண்டு புடாபெஸ்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் அமெரிக்கா பந்தைய தூரத்தை 3:08.80 கடந்த நேர இடைவெளியே உலக சாதனையாக காணப்பட்டது.

எனினும் தனது சொந்த சாதனையை மீண்டும் அமெரிக்கா முறியடித்து இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் இறுதிப்போட்டியில் அமெரிக்கா பெல்ஜியம் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளுடன் போட்டியிடவுள்ளது.

Share
தொடர்புடையது
us troops
உலகம்உலகம்

ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பலி.

ஜோர்டானில் ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் இரண்டு அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்...

kuwait airport
உலகம்

ஈரானின் தாக்குதல்களால் நிறுத்தப்பட்டது குவைத் விமான நிலையத்தின் சேவைகள்.

குவைத் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் புறப்படுதல் மற்றும் தரையிறங்குதல் ஆகிய நடவடிக்கைகள், மத்திய கிழக்கில்...

VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...