உக்ரைனில் நீண்ட நாட்களாக நடைபெறும் சண்டை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழலை அமெரிக்கா உருவாக்கி வருகிறது என ரஷிய அதிபர் புடின் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இது தொடர்பாக தெரிவிக்கையில்,
மோதல் பகுதிகளில் போரை நீடிக்கும் நோக்கத்துடன் அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இந்த மோதலை நீடிக்க அமெரிக்கா முயல்வதையே உக்ரைன் நிலைமை காட்டுகிறது.
ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா பகுதிகளிலும் அமெரிக்கா அதையே செய்ய முயற்சிக்கிறது.
தைவானுக்குச் சென்ற அமெரிக்க சபாநாயகர் பெலோசியின் பயணம், ஒரு தனிப்பட்ட பொறுப்பற்ற அரசியல்வாதியின் பயணம் மட்டுமல்ல, தைவான் பிராந்தியத்திலும் உலகின் பிற பகுதிகளிலும், நிலைமையை சீர்குலைத்து குழப்பமடையச் செய்யும் நோக்கத்துடன் செயல்படும் அமெரிக்க உத்தியாகும் என தெரிவித்தார்.
#World
Leave a comment