ஜனநாயகம் தொடர்பான காணொலி மாநாட்டில் விவாதிக்க சீனாவிற்கு அழைப்பு விடுக்காது , தாய்வானை அமெரிக்கா அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்வரும் டிசம்பர் 9, 10 ஆகிய திகதிகளில் மாநாடு இடம்பெறவுள்ளது.
இதில் பங்கேற்க இந்தியா உள்ளிட்ட 110 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.
இம்மாநாட்டில் ஊழலுக்கு எதிராகவும், மனித உரிமைகள் உள்ளிட்டவை தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க சீனாவை அமெரிக்கா அழைக்காத நிலையில், தாய்வானிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவை மேலும் கோபப்படுத்தும் வகையில் தாய்வானை அமெரிக்கா அழைத்துள்ளது எனக் கூறப்படுகிறது.
#world
Leave a comment