ezgif 3 88ccfb970f
உலகம்செய்திகள்

அலிபாபா நிறுவனர் ஜப்பானில் தலைமறைவு!!

Share

சீனாவை சேர்ந்த பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. இவரது நிறுவனத்தின் மீது அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

இதனால் அதிருப்தி அடைந்த ஜாக் மா கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஷாங்காய் நகரில் நடந்த ஒரு வர்த்தக மாநாட்டில் சீன அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த சம்பவத்துக்கு பின் ஜாக் மா திடீரென மாயமானார்.

பல மாதங்கள் அவர் பொதுவெளியில் தோன்றாமல் போனார். அதை தொடர்ந்து சீன அரசு அவரை கைது செய்ததாகவும், அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு வதந்திகள் பரவின.

எனினும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சீனாவில் 100 ஆசிரியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக நடந்த ஒரு சந்திப்பில் ஜாக் மா தோன்றி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதே சமயம் அவர் எங்கு இருக்கிறார் என்பது தொடர்ந்து மர்மமாகவே இருந்தது.

இந்த நிலையில் ஜாக் மா ஜப்பானில் தஞ்சமடைந்துள்ளதாகவும், அங்கு அவர் கடந்த 6 மாதங்களாக தனது குடும்பத்துடன் வசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜாக் மாவுக்கு நெருக்கமானவர்கள் வழங்கிய தகவல்களை மேற்கோள்காட்டி பிரபல ஜப்பான் செய்தி நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது.

ஜாக் மா ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் தங்கியிருப்பதாகவும், அவர் அடிக்கடி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு சென்றுவருவதாகவும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

#World

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world
செய்திகள்இந்தியா

சீமான் பின்னடைவு: தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் பிரபு முன்னிலை!

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

Untitled 5
செய்திகள்இலங்கை

ஏர்பஸ் ஊழல் விசாரணை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை விடுக்கப்படவில்லை என ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானக் கொள்முதல் ஊழல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...

Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு: சமுர்த்தி திணைக்களம் தகவல்!

நாட்டில் உள்ள ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர், அவர்களைப் பொருளாதார ரீதியாக...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வந்தடைந்த இரு கப்பல்கள்: தடையின்றி விநியோகம் செய்ய உறுதி!

நாட்டின் எரிபொருள் தேவையைத் தடையின்றிப் பூர்த்தி செய்யும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் அடங்கிய இரண்டு...