1 1 1 scaled
உலகம்செய்திகள்

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

Share

60 நாடுகளை சேர்ந்த 7000 மக்கள்: காசா எல்லையில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டினர்

இஸ்ரேல் ஹமாஸ் படையினருக்கு இடையிலான போரினால் 7000 வெளிநாட்டு குடிமக்கள் வெளியேற முடியாமல் காசா பகுதியில் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் படையினர் இடையிலான போர் நடவடிக்கையானது 4வது வாரமாக நீடித்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை கூண்டோடு ஒழித்து கட்ட வேண்டும் என்ற நோக்கில் இஸ்ரேல் ராணுவத்தினர் தரை, கடல், வான் என மும்முனை தாக்குதலை பாலஸ்தீனத்தின் மீது நடத்தி வருகிறது.

இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் வருகின்றனர்.

இந்நிலையில் பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்த 7000 குடிமக்கள் பாலஸ்தீனத்தின் காசாவில் சிக்கித் தவிப்பதாக எகிப்து வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

எகிப்து வெளியுறவு அமைச்சகத்தை சுட்டிக் காட்டி DPA செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலில், 60 நாடுகளை சேர்ந்த சுமார் 7000 பொதுமக்கள் காசாவில் இருந்து வெளியேறும் வாய்ப்பிற்காக காத்து இருப்பதாக தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 360 வெளிநாட்டினர் மற்றும் காயமடைந்த 81 பாலஸ்தீனியர்கள் காசாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக எகிப்துக்கு வந்துள்ளார்கள் என CNN தெரிவித்துள்ளது.

இவற்றில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, ஜோர்டான், சவுதி அரேபியா, இத்தாலி, ஜப்பான் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் குடிமக்கள் எகிப்துக்கு வந்து இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...