இந்தியாவில் 2022 ஆண்டிற்குள் 500 கோடி தடுப்பூசி தயாரிக்கப்படுமென இந்திய பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார்.
G20 மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் அடுத்த வருட இறுதிக்குள் இந்தியாவில் 500 கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்படுமென தெரிவித்துள்ளார்.
ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் 20 நாடுகள் பங்கு பெறுகின்றன.
ஜி20 மாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி அவர்கள் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போரில் இந்தியாவின் பங்களிப்புகளை எடுத்துரைத்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
கொரோனாவை வைரஸ் பரவலின்போது இந்தியாவினால் 150 நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டன.
அத்தோடு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கோவாக்சின் தடுப்பூசியும் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன .
கோவாக்சின் தடுப்பூசிக்கு சர்வதேச அனுமதி கோரி இந்தியா ,உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் அதற்கு அனுமதி கிடைத்ததும் மற்ற நாடுகளுக்கும் விநியோகிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.
#world
Leave a comment