24 6686bc6872e8addddddddddd
உலகம்செய்திகள்

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு

Share

பெண்ணை உயிருடன் விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு

இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த கோர சம்பவம் நேற்று (3.7.2024) இந்தோனேசியா – தெற்கு சுலவேசியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், உயிரிழந்த பெண் தனது நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு மருந்து வாங்குவதற்காக அவர் தனது வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார்.

பெண் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் பாம்பின் அருகில் குறித்த பெண்ணின் செருப்பு அவரது கணவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில், 16 அடி தூரத்தில் வாயிலிருந்து கால்கள் வெளியே நீட்டிய நிலையில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

36 வயதுடைய சிரியாட்டி என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
VIETNAM BOAT
உலகம்

இரண்டு படகுகள் கவிழ்ந்ததா – 500 இற்கும் மேற்பட்டவர்கள் நிலை என்ன?

மியன்மார் கடற்கரையை அண்மித்த கடற்பகுதியில் 500க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம்...

New Wave Of Attacks Iran That Lasted Seven Hours
உலகம்

அமெரிக்காவின் ஏழு மணிநேர தாக்குதல் – ஈரானின் ஏழு வீரர்கள் பலி.

ஈரானின் தென்கிழக்கு நகரமான பம்பூரில் உள்ள இராணுவத் தளத்தை குறிவைத்து அமெரிக்கா நடத்திய இரவுநேரத் தாக்குதல்களில்...

iraan us war
உலகம்

அமெரிக்காவிற்கு பதிலடி வழங்கிய ஈரான் – அமெரிக்க தளங்கள் இருக்கும் நாடுகள் மீது பலத்த தாக்குதல்.

  அமெரிக்க இராணுவ தளங்களை குறிவைத்து, ஜோர்டான், குவைத் மற்றும் கத்தாரில் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்...

water cut
உலகம்

பிரித்தானியாவில் வறட்சியை தடுப்பதற்கு பிரித்தானியாவில் புதிய தண்ணீர் கட்டுப்பாடுகள்.

  பிரித்தானியாவின் பல பகுதிகள் வெப்ப அலை காரணமாக வெப்ப சாதனைகளை படைத்துள்ளன. 1976 மற்றும்...