உலகம்
மனித மாமிசத்தை உட்கொண்ட நபர் : அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம்
பிரான்சில் (France) மனித இறைச்சியை உட்கொண்ட நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சை சேர்ந்த நிக்கோ கிளாக்ஸ் (Nico Clax) என்ற நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் மனித மாமிசத்தின் சுவை குறித்து ஒரு காணொளி ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் அவருக்கு சிக்கன் மற்றும் ஆட்டு இறைச்சி விட மனித மாமிசம் தனக்கு விருப்பமானது என தெரிவித்துள்ளார்.
மனித இறைச்சி குதிரையின் இறைச்சியை போன்று இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மெலிந்தவரின் இறைச்சியை சாப்பிடுவது பிடிக்காது என்றும் கொழுத்த மனிதனின் இறைச்சி சுவையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடயம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.