24 668a27a81a571
உலகம்செய்திகள்

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம்

Share

கனடா செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கட்டுநாயக்கவில் கைது: வெளியான காரணம்

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு (Canada) செல்லவிருந்த இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த 27 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சவூதி அரேபியாவின் (Aaudi Arabia)தம்மாம் நோக்கிச் செல்லவிருந்த சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-263 இல் செல்வதற்காக அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.

அதனை தொடர்ந்து, சவூதியில் இருந்து வேறு விமானம் மூலம் குறித்த இளைஞன் கனடா செல்ல திட்டமிட்டிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏர்லைன்ஸ் சோதனைகளை முடித்துக் கொண்டு குடிவரவுத் துறையின் எல்லைக் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைத் தடுத்து நிறுத்தி கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களைச் சரிபார்த்துள்ளனர்.

அதன் போது, குறித்த கடவுச்சீட்டு கனேடிய வீசாவைக் கொண்டுள்ள மற்றுமொரு இலங்கையருடையது எனத் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், 18 லட்சம் ரூபாயை தரகர் ஒருவரிடம் கொடுத்து, தனது புகைப்படம் மற்றும் பிற அடிப்படைத் தகவல்களை கடவுச்சீட்டில் இணைத்து, இந்தக் கடவுச்சீட்டை போலியாகத் தயாரித்துள்ளதாக, குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைப் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளிடம் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...