tamilnaadi 131 scaled
உலகம்செய்திகள்

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கிரிக்கெட் வீரரின் மரணம்

Share

இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கிரிக்கெட் வீரரின் மரணம்

தமிழக அணிக்கு எதிரான போட்டியில் கர்நாடக அணியில் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஹொய்சலா கே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏஜிஸ் தென் மண்டல கிரிக்கெட் (Aegis South Zone tournament) போட்டிகள் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் நடைபெற்று வருகின்றன.

இதில், தமிழ்நாடு – கர்நாடக அணிகள் மோதிய நேற்றைய போட்டியில் கர்நாடக அணி வெற்றி பெற்றது.

34 வயதான, ஹொய்சலா 25 வயதுக்குட்பட்டோர் பிரிவில் கர்நாடகா அணிக்காக விளையாடியுள்ளார்.

மேலும் அவர் கர்நாடக பிரீமியர் லீக் தொடரில் ஷிவமொக்கா லயன்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அணிக்கு எதிரான போட்டிக்கு பின், தனது அணி வீரர்களுடன் இரவு உணவு உண்பதற்காகச் சென்றுள்ளார்.

இதன்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், ஹொய்சலா மயங்கி கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, அவருக்கு கிரிக்கெட் மைதானத்தில் இருந்த மருத்துவர்கள் உடனடியாக அவரச சிகிச்சை அளித்துள்ளனர்.

அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அவரரை பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அவரது மறைவிற்கு கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...