tamilnaadi 132 scaled
இலங்கைசெய்திகள்

மட்டக்களப்பில் மாமியாரை அடித்து கொலை செய்த மருமகன்

Share

மட்டக்களப்பில் மாமியாரை அடித்து கொலை செய்த மருமகன்

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி பிரதேசத்தில் மாமியாரை அடித்து கொலை செய்துவிட்டு மருமகன் தப்பி ஓடியுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (23.02.2024) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழசைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகனேரி கூளையடிச்சேனையைச் சேர்ந்த 45 வயதுடைய வைரமுத்து கோமதனி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதன்போது உயிரிழந்தவரின் மகள் திருமணம் முடித்து இரு குழந்தைகள் உள்ள நிலையில் தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார். அவரது தாயாருடன் குழந்தைகள் மற்றும் அவரது கணவன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் மருமகன் மதுபோதையில் மாமியாருடன் தினமும் சண்டையிட்டு வந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று இரவு மாமியார் வீட்டில் தனிமையில் இருந்துள்ளபோது மது போதையில் வந்த மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதன்போது மாமியாரின் தலை மீது பாரிய பொருள் ஒன்றால் தாக்கியதையடுத்து அவர் உயிரிழந்ததையடுத்து 30 வயதுடைய மருமகன் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அயவர்கள் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலையில் ஓப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Share
தொடர்புடையது
anura kumara dissanayake 1
இலங்கை

பதவி குறித்து கவலை இல்லை – அநுர!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாட்டின் அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என...

சுரேஷ் சலேbyjtujtu
இலங்கை

சுரேஷ் சலேவை மயக்க நிலையில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்த முயற்சி!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சலே பரிசோதனைக்கு...

குழந்தையினை கைவிட்டு
இலங்கை

குழந்தையினை கைவிட்டு தப்பியோடிய தாய் – தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர்.

கண்டி – வத்தேகம நகரில் தனது நான்கு வயது குழந்தையை முச்சக்கர வண்டியில் வந்த தாயொருவர்...

Featured mm
இலங்கை

பெக்கோ சமன் தாயார் படுகொலை – பின்னணியில் பழிவாங்கும் படலம்!

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமன் என்ற நிர்மல பிரசங்க என்பவரின்...