1 7 scaled
உலகம்செய்திகள்

போர்க்களம் நேரிடையாக பார்த்ததுண்டா… டொனால்டு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்

Share

போர்க்களம் நேரிடையாக பார்த்ததுண்டா… டொனால்டு ட்ரம்புக்கு அழைப்பு விடுத்த உக்ரைன்

நீண்ட நான்கு மாதங்கள் கடுமையான மோதலுக்கு பிறகு, கிழக்கு உக்ரைனில் அமைந்துள்ள Avdiivka பகுதியில் இருந்து வெளியேறுவதாக உக்ரைன் ராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த தகவலை சனிக்கிழமை ராணூவத் தளபதி தெரிவித்துள்ளார். முற்றுகையிடப்பட்ட இந்த நகரமானது பல மாதங்களாக ரஷ்யாவின் தாக்குதல் முயற்சிகளின் மையப் புள்ளியாக இருந்து வருகிறது.

தற்போது போரின் இரண்டாவது ஆண்டு வெற்றிவிழாவினைக் கொண்டாடவிருக்கும் ரஷ்யாவுக்கு இது ஊக்கமாக அமையும் என்றே கூறப்படுகிறது. Avdiivka பகுதியில் இருந்து வெளியேறுவது தங்கள் ராணுவ வீரர்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு என உக்ரைன் தளபதி அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எங்கள் வீரர்கள் தங்கள் இராணுவக் கடமையை கண்ணியத்துடன் நிறைவேற்றினர் என்றும், சிறந்த ரஷ்ய இராணுவப் பிரிவுகளை அழிக்க முடிந்த அனைத்தையும் செய்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உரிய ஆயுதங்கள் இன்றி ரஷ்ய ராணுவத்தை எதிர்கொள்வது கடினம் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி மேற்கத்திய நாடுகளை எச்சரித்துள்ளார். மேலும், போர்க்களத்தில் நேரிடையாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியை அழைத்துச் செல்ல ஆசைப்படுவதாகவும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனுக்கு நிதி அளிப்பது தொடர்பில் டொனால்டு ட்ரம்ப் தமது எதிர்ப்பை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்த நிலையிலேயே உண்மையான போர் என்பது எப்படி இருக்கும் என்பதை டொனால்டு ட்ரம்ப் நேரிடையாக பார்க்க வேண்டும் என்று ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
கொலம்பியா
உலகம்

கொலம்பியாவில் பதிவான நிலநடுக்கத்தால் நூற்றுக்கணக்கானோர் பலி.

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளதாக சரவதேச ஊடகங்கள்...

ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...