விசா கட்டணத்தில் மாற்றம்: சீனா அறிவிப்பு
அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில், உள்வரும் பயண விசாக்களுக்கான கட்டணத்தை தற்காலிகமாக 25 வீதத்தால் குறைப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரை சீனாவின் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களுக்கும் இந்த நடவடிக்கை பொருந்தும் என சீனாவின் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.
“சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதற்கும், எளிதாக எல்லை தாண்டிய பயணத்திற்கு அதிக வசதியை வழங்குவதற்கும் தொடர்புடைய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்” என வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் வெளியிட்டுள்ளார்.