உலகம்
கட்டாயத் திருமணம், துஸ்பிரயோகம்… சிக்கலில் மொராக்கோ பெண்கள்
கட்டாயத் திருமணம், துஸ்பிரயோகம்… சிக்கலில் மொராக்கோ பெண்கள்
மொராக்கோவில் மொத்தமாக புரட்டிப்போட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் கட்டாயத் திருமணம் மற்றும் துஸ்பிரயோகத்திற்கு பெண்கள் இரையாவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
மொராக்கோவில் செப்டம்பர் 8ம் திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். இந்த நிலையில், ஆதரவற்ற இளம் பெண்களை காக்கும் பொருட்டு, கிராமப் பகுதிகளுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, சமூக ஊடகங்களில் ஆண்கள் பலர், ஆதரவற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள தயார் எனவும் விளம்பரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இளம் பெண்களை துஸ்பிரயோகம் செய்யும் நோக்கில் பயணப்படுவதாக குறிப்பிட்ட 20 வயது மாணவன் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இப்படியான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் மகளிர் அமைப்புகள் கோரிக்கை முன்வைத்து வருகின்றன. சிறார்கள் பலர் ஆபத்தான சூழலில் சிக்காமல் இருக்க, மொராக்கோ நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பாதுகாப்பு அளிப்பதாக கூறி, வேறு நாடுகளுக்கு சிறார்களை கடத்தும் செயலும் முன்னெடுக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்திற்கு பிறகு பாலியல் துஸ்பிரயோகத்தின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகியுள்ளது.
ஆனால் மொராக்கோவை பொறுத்தமட்டில் அப்படியான சூழலில் சிக்கும் சிறார்கள் அல்லது பெண்களுக்கு ஆலோசனை அல்லது சேவையை வழங்கும் அமைப்புகள் ஏதும் மொராக்கோவில் இல்லை என்றே கூறப்படுகிறது.