அரசியல்
திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்
திருமண நிகழ்ச்சியை சீர்குலைத்த மொராக்கோ நிலநடுக்கம்
மொராக்கோவில் திருமண நிகழ்ச்சியில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து மக்கள் பாதியில் அலறியடித்து ஓடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
மொராக்கோ நாட்டின் மாரகெச் நகரில் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்ட 6.8 ரிக்டர் என்ற அளவில் பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை 2100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இந்த நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருப்பதாகவும், அதில் 1404 பேர் வரை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் மக்கள் தூங்கி கொண்டு இருந்த போது ஏற்பட்டுள்ளதால் நிலநடுக்க பாதிப்புகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மொராக்கோவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கச்சேரி நடந்து கொண்டு இருந்த போது பயங்கர நிலநடுக்கம் குறுக்கிட்ட வீடியோ காட்சி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில் இசைக் கச்சேரியில் கலந்து கொண்ட பாடகர், இசைக் கலைஞர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட மக்கள் என பலர் மேடையை விட்டு வாசல் வழியாக தப்பியோடும் காட்சி இடம்பெற்றுள்ளது.