1 scaled
உலகம்செய்திகள்

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

Share

சீனாவின் கனவு திட்டத்திற்கு எதிராக இத்தாலி முக்கிய முடிவு

சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இருந்து விலக இத்தாலி முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மற்றும் கடல் வழி மார்க்கமாக ஆசியாவை ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இணைக்கும் பெல்ட் அன்ட் ரோடு (பிஆர்ஐ) )என்ற திட்டத்தை சீனா அறிவித்துள்ளது.

ஜி7 அமைப்பில் இருந்த இத்தாலி மட்டும் கடந்த 2004ம் ஆண்டு சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்து இருந்தது.

ஆனால் இதனை தொடர்ந்து சீனாவின் இந்த பெல்ட் அன்ட் ரோடு திட்டம் தங்கள் நாட்டின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என இத்தாலியின் வெளியுறவு அமைச்சர் அந்தோனியோ தஜானி இந்த மாத தொடக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.

இதைப் போல இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீனாவின் பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தில் இணைந்தது மிகப்பெரிய தவறு என்று அவ்வப்போது தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது செப்டம்பர் 9 மற்றும் 10 திகதியில் நடைபெற்று முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி சீன பிரதமர் லி கியாங்-ஐ சந்தித்து பெல்ட் அன்ட் ரோடு திட்டத்திலிருந்து இத்தாலி விலக முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி தன்னுடைய முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆனால் சீன பிரதமர் லி கியாங் வேண்டுகோளை இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

பெல்ட் அன்ட் ரோடு திட்டத்தின் அடுத்த கூட்டம் சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த திட்டத்தில் இருந்து இத்தாலி விலக முடிவு செய்து இருப்பது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 68f5c4968ea01
செய்திகள்இலங்கை

வெள்ள அபாய எச்சரிக்கை: பல வான்கதவுகள் திறப்பு!

மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயா படுகைப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழையைக் கருத்தில்...

image 95f229676a
செய்திகள்உலகம்

கரீபியன் கடலில் போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு: அமெரிக்கப் படைகள் நீர்மூழ்கிக் கப்பலைத் தகர்த்தன!

லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து கரீபியன் கடல் வழியாக அமெரிக்காவிற்கு அதிவிரைவு படகுகள் மூலம் போதைப்...

1752485228 GovyPay 6
செய்திகள்இலங்கை

போக்குவரத்து அபராதங்களை GovPay மூலம் செலுத்தலாம்: இலங்கை பொலிஸ் அறிவிப்பு

இலங்கைப் பொலிஸ் இன்று (அக்டோபர் 20) அறிவித்துள்ளதன் படி, தென் மாகாணத்தில் உள்ள வாகன ஓட்டுநர்கள்,...

image 7efc8d34a7
செய்திகள்இலங்கை

வவுனியாவில் பாரிய போதைப்பொருள் கைப்பற்றல்: 3.59 லட்சம் மாத்திரைகளுடன் இளைஞர் கைது!

வவுனியாவில், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில், மூன்று லட்சத்து 59 ஆயிரம் போதை மாத்திரைகளுடன்...