உலகம்
சீனாவின் புதிய எல்லை வரைபடம்: முக்கிய நாடுகள் எதிர்ப்பு
சீனாவின் புதிய எல்லை வரைபடம்: முக்கிய நாடுகள் எதிர்ப்பு
சீனாவின் புதிய எல்லை வரைபடத்திற்கு இந்தியாவை தொடர்ந்து பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீன அரசாங்கம் 2023ம் ஆண்டுக்கான புதிய நிலையான சீன எல்லை வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அக்சாய் சின் பகுதி முழுவதும் சீனாவின் ஒற்றை அங்கமாக காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வரைபடத்தில் தைவான், முழு தென் சீனக் கடல் பகுதிகள், பிலிப்பைன்ஸ் கடல் பகுதி ஆகியவற்றை தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதியாக சீனா அறிவித்துள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசம் இந்தியாவுடன் ஒருங்கிணைந்த பகுதி அதில் எந்தவொரு மாற்றமும் இல்லை என்று இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சீனாவின் 2023ம் ஆண்டுக்கான புதிய எல்லை வரைபடத்துக்கு இந்தியாவை தொடர்ந்து பல முக்கிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அந்த வகையில் சீனாவின் 2023ம் ஆண்டுக்கான புதிய எல்லை வரைபடத்துக்கு பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளன.