உலகம்செய்திகள்

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

Share

அரிசியை பொதிகளாக எடுத்துச் செல்லும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள்

இந்திய அரசு பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ள நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளில் எடுத்துச் செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 20ம் திகதி முதல் இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது, கனடா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரிசி உணவை அதிகமாக பயன்படுத்தும் மக்களை கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலையில், பல ஐக்கிய அரபு அமீரகவாசிகள் கோடை விடுமுறை முடிந்து திரும்பும் போது இந்தியாவில் இருந்து தங்கள் விருப்பமான அரிசியை பொதிகளாக கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக, குறிப்பிட்ட சில வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், தங்களின் விருப்பமான அரிசியை விடுமுறைக்கு சென்று திரும்பும்போது எடுத்துவருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
அதில் ஒருவர் ஷப்னா. இவர் சொந்த ஊருக்கு சென்றும் திரும்பும் போது 5 கிலோ அரிசி எடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது அரிசிக்கு உள்ளூர் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அவர் விடுமுறை முடித்து திரும்பும் போது அரிசி எடுத்து வந்துள்ளார்.
தடை என்பது தற்காலிக சிக்கல்
ஊருக்கு சென்று திரும்பும் போது அரிசி எடுத்து வருவதால், பெரிதாக ஆதாயம் ஏதும் இருப்பதில்லை என்றாலும், பெட்டியில் இடம் இருப்பதால், அரிசி எடுத்து வருவதாக ஷப்னா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து உலகெங்கிலும் மொத்தம் 140 நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது. மட்டுமின்றி, அரிசி ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதம் அளவுக்கு இந்தியாவில் இருந்தே முன்னெடுக்கப்படுகிறது.
இதனால், ஏற்றுமதி தடை என்பது தற்காலிக சிக்கல் எனவும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பாகிஸ்தான் நாடுகளில் இருந்து போதுமான அளவுக்கு வெள்ளை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...