உலகம்
இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!
இங்கிலாந்து மக்களுக்கு பேரிடி அதிகரிக்கும் வாடகை!
இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை அதிகரித்துள்ளதாக ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனல் எனும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகளோடு ஒப்பிடும்போது தற்போது வீட்டு வாடகை கட்டணம் மிகவும் உயர்ந்திருப்பதாக மேற்படி அமைப்பு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட 13 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பள உயர்வு ஏதும் இன்றி, அதிகரிக்கும் வீட்டு வாடகையினால் தங்களின் வருமானத்தின் பெரும்பகுதி பறிபோவதால் ஆண், பெண் இருபாலரும் மிகவும் சிரமப்படுகின்றனர் என ஹாம்ப்டன்ஸ் இன்டர்நேஷனலின் தலைவர் அனீஷா பெவரிட்ஜ் தெரிவித்துள்ளார்.
சராசரி 5 ஆண்டு நிலையான வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் 6.01% ஆக உயர்ந்த பிறகு, இங்கிலாந்தில் கடன் செலவுகள் 14 ஆண்டு உச்சத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும, எதிர்வரும் காலங்களில் குறைந்தளவே புதிய வீடுகளுக்கான தேவை இருக்கும் என்பதால், கட்டுமான நிறுவனங்கள் புதிய வீடுகளை கட்டுவதை கணிசமாக குறைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: உலக சாதனை படைத்துள்ள வெங்காயம் - tamilnaadi.com