உலகம்
உக்ரைன் – ரஷ்யா போர்! மோடி தகவல்!!
உக்ரைன் – ரஷ்யா போர்! மோடி தகவல்!!
இரு நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவ எல்லைகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என இந்திய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டின் நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
மேலும் கூறகையில்,“ சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் நான்தான், எனது ஒவ்வொரு செயலிலும் நாட்டின் பண்பாட்டு விழுமியங்கள் தாக்கம் செலுத்தும். உலக அரங்கில் இந்தியா இன்னும் மிகப்பெரிய அங்கீகாரத்தையும், இடத்தையும் பெற தகுதியுள்ள நாடு.
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா இடம்பெறுவது குறித்து உறுப்பு நாடுகளிடம் கருத்துக் கேட்கப்பட வேண்டும். சீனாவுடனான எல்லை பிரச்சினை எனும் போது, இரு நாடுகளிடையே நல்லிணக்கம் நிலவ எல்லைகளில் அமைதி நிலவ வேண்டியது அவசியம்.
இதேபோன்று, உக்ரைன் – ரஷ்யா பிரச்சினையில் இந்தியா நடுநிலையாக உள்ளது என்று கூறுவது தவறு என்றும், அமைதியின் பக்கம் தாங்கள் நிற்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
You must be logged in to post a comment Login