1846860 china1
உலகம்செய்திகள்

அமெரிக்காவால் மக்களின் எதிர்காலம் பாதிக்கும் – சீனா எச்சரிக்கை

Share

அமெரிக்கா- சீனா இடையிலான உறவு சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் மோசமடைந்துள்ளது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் கீரியும், பாம்புமாக சண்டையிட்டு வருகின்றன.

குறிப்பாக தைவான் விவகாரத்தில் இருநாடுகளும் மோதலை நோக்கி நகர்ந்து வருகின்றன. இந்தநிலையில் சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சராக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்ற கின் காங், முதல் முறையாக சீன பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பிறகு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது – அமெரிக்காவுடனான பிரச்சினை குறித்து அவர் பேசியதாவது:-

அமெரிக்காவின் சீனக் கொள்கை பகுத்தறிவு மற்றும் ஒலி பாதையில் இருந்து முற்றிலும் விலகியிருக்கிறது. சீனா மீதான விரோத கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் தவறான பாதையில் தொடர்ந்து வேகமாக சென்றால் மோதல் ஏற்படுவது நிச்சயம்.

அமெரிக்காவின் இந்த பொறுப்பற்ற செயல் இருநாட்டு மக்களின் அடிப்படை நலன்களையும், மனிதகுலத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கும் என்பதை அமெரிக்கா நினைவில் கொள்ள வேண்டும். தைவான் விவகாரத்தில் சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா அவமதிக்கிறது. தைவான் பிரச்சினையில் அமெரிக்கா சிவப்பு கோட்டை தாண்ட கூடாது.

தைவானுக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா, சீனாவை ரஷியாவிற்கு ஆயுதங்களை வழங்க வேண்டாம் என்று கேட்பதில் என்ன நியாயம் இருக்கிறது – என்று கூறினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
5 17
இலங்கைசெய்திகள்

சரத்பொன்சேகாவிடம் உள்ள குரல் பதிவு- காணொளிகளை வெளியிடுமாறு நாமல் வலியுறுத்து

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வசம் குரல் பதிவுக் காணொளிகள் இருந்தால் அதை அவர்...

4 17
இலங்கைசெய்திகள்

செவ்வந்தி விவகாரத்தில் அநுர விடுத்த மிக இரகசிய உத்தரவு

இஷாரா செவ்வந்தி விவகாரத்தில் மிக இரகசியமான நடவடிக்கையொன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இரகசிய உத்தரவுக்கமைய பொலிஸ்...

2 17
இலங்கைசெய்திகள்

15 கோடி சம்பளமா.? யாரோ எழுதி விட்டுடாங்க… நான் தான் திட்டு வாங்குறேன்.! மமிதா பைஜூ பகீர்.!

சமீபத்தில் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக திகழும் மமிதா பைஜூ, ஒரு...

images 1
செய்திகள்இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் இன்று (அக்டோபர் 18) பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது...