202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
இலங்கைஉலகம்செய்திகள்

இலங்கையர்கள் உட்பட 27 பேர் வெளிநாட்டில் கைது!

Share

இலங்கை, பங்களாதேஷ், எரித்திரியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர் ருமேனியாவின் அராட் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அவர்கள் சட்டவிரோதமாக எல்லையை கடந்து ஹங்கேரிக்கு செல்லும் நோக்கில் புடவைத் துணிகள் மற்றும் உலோக கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு கனரக வாகனத்துக்குள் மறைந்திருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

ருமேனியாவின் நட்லாக் எல்லையில் கனரக வாகனமொன்று பொலிஸாரால் சோதனையிடப்பட்டது. அதில், சரக்கு கொள்கலனின் முன் பகுதியில் இருந்த ஒரு சிறப்பு பெட்டியில், மறைந்திருந்த 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அவர்கள் மேலதிக விசாரணைக்காக அராட் பொலிஸ் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்கள் 21 முதல் 67 வயதுடைய பங்களாதேஷ் மற்றும் எரித்திரிய நாட்டவர்கள் எனக் கண்டறியப்பட்டது.

இதேவேளை, பொலிஸாரால் உலோகக் கம்பிகள் ஏற்பட்ட மற்றுமொரு கனரக வாகனம் சோதனையிடப்பட்டது. அதன்போது, அதில் மறைந்திருந்த இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 21 – 42 வயதுக்கு இடைப்பட்ட 10 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 2 6
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டியில் நாளை பாரிய போராட்டம்: சட்டவிரோத விகாரை என அறிவிப்புப் பலகை நடவும் தீர்மானம்!

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாகக் கையகப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராகவும், அதன்...

images 25
செய்திகள்அரசியல்இலங்கை

தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவைப் பலப்படுத்துக: ஜனாதிபதிக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் (RTI Commission) சுயாதீனத்தன்மை மற்றும் அதன் செயல்பாட்டுத் திறனை...

images 1 7
செய்திகள்அரசியல்இலங்கை

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: பெப்ரவரி 28-க்குள் கருத்துக்களை வழங்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை!

தற்போதைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச்...

articles2FgXcy4cN9KrF77yKDhQ7d
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு உளநல மேம்பாட்டுத் திட்டம்: திங்கட்கிழமை ஆரம்பம்!

அனர்த்த நிலைமைகளினால் பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆரோக்கியம் மற்றும் நலன்புரி ஓம்புகையை மேம்படுத்தும் நோக்கில், வளவாளர்களைப்...